தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்.!

டெல்லி: வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுவதற்காக கூடுதலாக 16 ஆயிரத்து 728 கோடி ரூபாய் நிதி பெற தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh)   ஆகிய மாநிலங்கள், வர்த்தகம் தொடர்பாக  சில நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஐந்து மாநிலங்களும் தொழில் (Business) துவங்குவதை எளிமையாக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பேரில் கூடுதல் கடனை திரட்ட மாநிலங்களை மே மாதத்தில் அரசாங்கம் (Central Government) அனுமதித்தது. அதன் அடிப்படையில் மொத்தம் ரூ .16,728 கோடி கூடுதல் கடனை (Loans) திரட்டிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 813 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 2 ஆயிரத்து 525 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 4 ஆயிரத்து 509 கோடி ரூபாயும், மத்தியப் பிரதேசத்திற்கு 2 ஆயிரத்து 373 கோடி ரூபாயும், தெலங்கானாவிற்கு 2 ஆயிரத்து 508 கோடி ரூபாயும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த நிதி வழங்கப்படுவதாக, மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் (Budget) மேலாண்மை சட்டத்தின் கீழ், மாநிலங்கள் (States) தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) மூன்று சதவீதமாக தங்கள் கடனை மட்டுப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்தில், கோவிட் -19 (Covid-19) நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சீர்திருத்தவாத விதிமுறைகளுடன் மாநிலங்களின் கடன் வரம்பை ஒட்டுமொத்தமாக இரண்டு சதவீதம் உயர்த்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. நிதியமைச்சகத்தின் இந்த சலுகையை தமிழகம் (Tamil Nadu)  சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த நிபந்தனைகளில் ஒரு நாடு-ஒரு-ரேஷன் அட்டைகள் (one-country-one-ration cards), தொழில் துவங்க இணக்கமான சூழல், நகராட்சி / பொது சேவைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் மின் துறையில் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும்

இந்த சீர்திருத்தங்களை 2020 பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும், அப்போதுதான் இந்த ஐந்து மாநிலங்களும் கூடுதல் கடன்களை வாங்க அனுமதிக்கப்படும் என்றும் கெடு விதித்துள்ளது.