டெல்லி: கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துவதில் மத்திய அரசு தீவிர வேகம் காட்டி வருகிறது. அதன்படி 1 கோடியே 19 லட்சத்து 24 ஆயிரத்து 491 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
பரிசோதனைகள் அதிகரிக்கப்பால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.  செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
பாதிப்பு அதிகரித்து வரும் அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 5 லட்சத்து 5,15,385 பேருக்கு மேல் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,31,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையடுத்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 62.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.