கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம்! பிரதமர் மோடி

டெல்லி:  கப்பல்அமைச்சகத்தின் பெயர் ‘துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம்’ என மாற்றம் செய்யப்படுவதாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அறிவித்தார்.

குஜராத்தில் பவ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோகா மற்றும் சூரத் நகருக்கு அருகே அமைந்த ஹசீரா ஆகிய நகரங்களுக்கு இடையேயான பயண தொலைவை குறைக்கும் நோக்குடன் படகு போக்குவரத்து திட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே நேற்று  தொடங்கி வைத்து பேசினார். அப்போது,  கப்பல் அமைச்சகத்தை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளார்.  இனிமேல் இந்த பெயரில் தான் இந்தத் துறை இயங்கும் என்றும்  ‘அமைச்சகம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் முக்கிய பகுதியாக நாட்டின் கடற்பகுதி வெளிப்பட்டு உள்ளது.  அதற்கான பணிகள் நடந்துள்ளன.   நீர்வழி போக்குவரத்தின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை வெகுவாக குறைக்க முடியும். சரக்குகளின் தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு உகந்த சுற்று சூழலை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. வளர்ந்த பொருளாதாரத்தில், பல இடங்களில், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கையாண்டு இருப்பதாகவுங்ம,  இந்தியாவில், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து தொடர்புடைய நிறைய பணிகளை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கப்பல் போக்குவரத்து துறை இனி, ‘துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறையினர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பாஜக அரசின் நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.  இந்த பெயர் மாற்றத்தால் அந்தத் துறை என்ன முன்னேற்றம் காணப்போகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.