கோயிலுக்குள் ஊனமுற்ற சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்-மக்கள் தர்ம அடி

புபனேஸ்வர்,

ஒடிசாவில் ஊனமுற்ற சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அம்மாநிலத்தில் பரிபடா என்ற ஊரில் ஜகன்னாத் கோவில் அமைந்துள்ளது.

நேற்றுமுன் தினம் இரவு சாமிதரிசனம் செய்ய ஊனமுற்ற 11 வயது சிறுமி அந்தக் கோவிலுக்குச் சென்றார். அப்போது யாரும் இல்லாமல் கோயில் வெறிச்சோடி இருந்தது.  இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்தப்பகுதியை சேர்ந்த விஷமி ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து அந்தச் சிறுமியை சீரழித்துள்ளான்.

உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு தரையில் கிடந்த அந்தச் சிறுமியை கோவிலுக்கு வந்த சிலர் காப்பாற்றினர்.

கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அந்தச் சிறுமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் அந்தக் கயவனை தேடிப்பிடித்து சரமாரியாக அடித்துத் துவைத்துள்ளனர், பின்னர் அவனை போலீசாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.