Random image

  சிறுமி பாலியல் பலாத்காரம்: விநாயகர் பந்தலின் பின்னால் நேர்ந்த கொடுமை

காராஷ்டிராவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலில் 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்கர் பகுதியில் அகர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பலாத்காரப்படுத்திய 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய பல்கர் பகுதி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹேமந்த் குமார் கட்கர், ”கடந்த திங்கட்கிழமை இரவு, அகர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக 13 வயது சிறுமி, தனது தோழிகளுடன் சென்றிருக்கிறார்.  அங்கே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

பந்தல் ஒப்பந்ததாரரான இளைஞர்  சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, வழிபாட்டு இடத்துக்குப் பின்னால் அழைத்துச் சென்றார். அங்கு அவர், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பிறகு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அழுதுகொண்டே தனது வீட்டுக்கு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் குறித்துத் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒப்பந்ததாரர் சிறுமியின் பெற்றோர் மீது புகார் அளித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரைக் காவல்துறை தேடி வருகிறது” என்று தெரிவித்தார்.