Random image

இருவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தீக்குளித்து தற்கொலை : அலிகாரில் அவலம்

லிகார்

த்திரப் பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் தீக்குளித்த ஒரு சிறுமி தன்னை இருவர் பலாத்காரம் செய்ததாக இறக்கும் போது தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் வசிக்கும் ஒரு மைனர் பெண் வெள்ளிக்கிழமை அன்று ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் வரும் போது குறுக்கே சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.   அவரைக் காப்பாற்றிய ரெயில்வே காவல்துறையினர் வீட்டில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

அதன் பிறகும் அந்த சிறுமி சோர்வாகவே இருந்துள்ளார்.   கடந்த  திங்கட்கிழமை அன்று அவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.  உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.   ஆயினும் சிகிச்சை பலனின்றி சிறுமி மரணம் அடைந்துள்ளார்.

இறக்கும் தறுவாயில் சிறுமி தனது தந்தையை அழைத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் வீட்டுக்கு வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்றதாகவும்  அப்போது தம்மை இருவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த தந்தை இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.   தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   காவல்துறையினர் இது குறித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.