சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக் கடைகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

சென்னை

சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக்கடைகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்

வேலுமணி

கொரோனா காரணமாக அனைத்து இடங்களில் சமூக இடைவெளியாக ஒரு மீட்டர் இடைவெளி விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களி அது  பின்பற்ற படுவதில்லை என கூறப்படுகிறது.

எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து இறைச்சி கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தனது டிவிட்டர் பதிவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விதிமுறைகளை மீறினால், 3 மாதங்களுக்கு கடையை திறக்க முடியாது என்றும் அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.