Random image

விராட் கோலி மற்றும் மீராபாய் சானுவிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுத்தூக்கும் வீரங்கனை மீராபய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

virat

விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசால் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும்.

விளையாட்டுத்துறை சங்கங்களின் பரிந்துரையை தொடர்ந்து, வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து அந்த அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் விராட் கோலி, மீராபாய் சானு உள்பட பல வீரர்களின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் செப்டம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.