திகில் பரப்பும் மிஷ்கின், அருண்விஜய்… கேட்டாலே அதிரும் டைட்டில்..

இயக்குனர்களில் வித்தியாசமானவர் மிஷ்கின். உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ என்ற படம் இயக்கியவர் அடுத்து துப்பறிவாளன் 2ம் பாகத்தை விஷால் வைத்து இயக்கி வந்தார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து படத்தை இயக்க மறுத்து வெளியேறினார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் நிலையில் நடிகர் அருண்விஜய்யுடன் வீடியோவில் பேசி கதை கூறினார். அது பிடித்து விடவே நடிக்க சம்மத்தித்தார் அருண்விஜய்.


.
இதுவொரு திகில் படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்துக்கு ‘காவு “என டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. டைட்டிலேயே திகிலை கிளப்பும் நிலையில் படம் எவ்வளவு திகிலாக இருக்கும் என்பதை சொல்லவேண்டியிருக்காது. ஏற்கனவே பிசாசு என்ற திகில் படத்தை மிஷ்கின் இயக்கி அதை வெற்றி படமாக்கினார்.