ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் மிஸ் இந்தியா.
தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20-வது படமாகும் .
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
மிஸ் இந்தியா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்படமும் நவம்பர் 4-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இந்த ட்ரெய்லரில் டீ பிசினஸ் செய்யும் தொழில் முனைவோராக கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார்.

 
இந்த படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்போடு படத்தின் ட்ரைலரையும் படக்குழுவினர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் புதிய பாடல் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.