கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்….!

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் மிஸ் இந்தியா.

தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20-வது படமாகும் .

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

மிஸ் இந்தியா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படமும் நவம்பர் 4-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இந்த ட்ரெய்லரில் டீ பிசினஸ் செய்யும் தொழில் முனைவோராக கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார்.