‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு……!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மிஸ் இந்தியா’ .

மிஸ் இந்தியா படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படம் ஆகும். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேந்திரா நாத் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ் 15 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றது. மிஸ் இந்தியா படத்தில், ஜகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், பானுஸ்ரீ மெஹ்ரா, சுமந்த், பூஜிதா, கமல் காமராஜூ, நதியா ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் .படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்த கீர்த்தி, 2020 ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று தனது ரசிகர்களை வாழ்த்தி, “நாங்க இருக்குற இடத்தில்.. மேஜிக் நடக்கும்..! #MissIndia சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்” என்று எழுதினார். அந்த கிளாசிக்கான போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.