உலக அழகிப் பட்டம் வென்ற ஜமைக்கா அழகி : மூன்றாம் இடத்தில் இந்தியா

ண்டன்

ண்டனில் நடந்த உலக அழகிப்போட்டியில் ஜமைக்கா அழகியான டோனி அன் சிங் என்பவர் முதல் இடத்தைப் பிடித்தார்.

வருடா வருடம் ஒவ்வொரு நாட்டிலும் அழகிப்போட்டி நடைபெற்று அதில் முதல் இடத்தை  பிடிப்பவர் அந்த வருடப் பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் இரண்டாம் இடத்தை பிடிப்பவர் உலக அழகிப் போட்டியிலும் கலந்துக் கொள்வது வழக்கமாகும்.  இந்த வருடத்துக்கான உலக அழகிப் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது.

 

இந்திய அழகி சுமன் ராவ்

பிரிட்டன் நாட்டின் பியர்ஸ் மோர்கன் இந்த போட்டியில் நடுவராக இருந்தார்.   பல சுற்றுக்களில் வெற்றி பெற்ற அழகிகளில் முதல் மூன்று இடங்களில் ஜமைக்கா அழகியான டோனி அன் சிங், பிரான்ஸ் நாட்டின் ஓப்லி மெஸினோ மற்றும் இந்தியாவின் சுமன் ராவ் ஆகிய மூவர் வந்தனர்.   இறுதிச் சுற்றில் அவர்கள் அறிவுத் திறனுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.  இதில் ஜமைக்கா அழகி டோனி அன் சிங் வெற்றி பெற்று உலக அழகிப்பட்டத்தை கைப்பற்றினார்.

பிரான்ஸ் அழகி ஓப்லி மெஸினோ இரண்டாம் இடத்தையும் இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

உலக அழகியான டோனி அன் சிங் 23 வயதானவர் ஆவார்.  இவர் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பெண்கள் நலன் மற்றும் மனநலம் ஆகியவற்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  இவரிடம் உலகில் அவருக்கு மிகவும் முக்கியமானது எது எனக் கேட்டதற்குத் தனது தாய் என விடை அளித்துள்ளார்.