மிஸ் மெட்ராஸ் நடிக்கும் “அமையா”

2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற சுஜா சூர்யநிலா நடிக்கும் புதிய திரைப்படம் “அமையா”

பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நிகில் வி.கமல் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கும் படம்.

படத்திற்கு இசை எஸ்..கௌதம். , பாடல்களை இயக்குனர் நிகில் வி.கமலே எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு.. இரட்டையர்கள் ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ P.ஜார்ஜ். படத்தொகுப்பு , ராஜேஷ் ஹரிஹரன்.

படத்தின் கதை குறித்து இயக்குநர் நிகில் வி.கமல், “வெளியுலகமே தெரியாத பழங்குடியி பெண் ஒருத்தி. அவளது பகுதிக்கு வரும் நகரத்து இளைஞனுடன் காதல் ஏற்படுகிறது. கர்ப்பமாகிவிடுகிறாள். பிறகு அவனைக் காணவில்லை. காதலனைத்தேடி நகரத்துக்கு வருகிறாள்.

இதில் முக்கிய விசயம் என்னவென்றால்.. காதலனின் பெயர்கூட அவளுக்குத் தெரியாது. இந்த நிலையில் காதலனைக் கண்டுபிடித்தாளா என்பதுதான் கதை..” என்றார்.