ட்லாண்டா

ட்லாண்டாவில் நடந்த அழகிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அழகியான சொசிபினி துன்ஸி பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் அழகிப் பட்டம் பெற்றவர்கள் பிரபஞ்ச அழகிப் போட்டியிலும்,  இரண்டாவதாக வந்தவர்கள் உலக அழகிப் போட்டியிலும் கலந்துக் கொள்வார்கள்,   அவர்களில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பட்டம் பெறுவார்கள்.  இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப்போட்டி அட்லாண்டாவில் நடந்தது.

இந்தப் போட்டியில் பல நாட்டு அழகிகள் கலந்துக் கொண்டனர்.   இந்த வருட இந்திய அழகியான வர்திகா சிங் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்டார்.  இந்த போட்டியில் பல சுற்றுக்களில் கலந்துக் கொண்ட அழகிகளில் இந்திய அழகி முதல் 10 இடத்துக்குள் வராதது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்தது.

இந்த சுற்றில் இறுதிக் கேள்வியாக ”இந்தக் கால இளம் பெண்களுக்கு நீங்கள் கற்பிக்க விரும்பும் முக்கியமான விஷயம் என்ன?” எனக் கேட்கப்பட்டது.  இதற்கு அழகிகள் அளித்த பதிலில் அடிப்படையில் இறுதிச் சுற்று முடிவடைந்தது.    இந்த இறுதிச் சுற்றில் முதலாவதாக வந்த தென் ஆப்ரிக்க அழகி சொசிபினி துன்ஸி பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.,

சொசிபினி துன்ஸிக்கு சென்ற ஆண்டின் பிரபஞ்ச அழகி காத்ரியோனா கிரே அவருக்கு முடி சூட்டினார்.  இவருக்கு தற்போது 26 வயதாகிறது

பியூர்டோ ரிகோ அழகி இரண்டாம் இடத்தையும்  மெக்சிகோ அழகி மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.   இவர்களுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, கொலம்பியா அழகிகள் உள்ளனர்.