இன்று பிரபஞ்ச அழகிப்போடடி:  வெல்லப்போவது இவரா?

:மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரபஞ்ச அழகிப் போட்டி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் 89 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கிறார்கள்

இவர்களில் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்படப் போகிறவர் யார் என்று பல்வேறுயூகங்கள் எழுந்துள்ளன.

அவர்களில்  ஒருவரான அமெரிக்காவின் தேஷ்ஹனுனா பார்பர் அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அதே போல கனடா சார்பாக கலந்துகொள்ளும் சியாரா பார்செல் என்பவரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் மகளிர்  அமைப்பில் பணியாற்றுபவர்.  ஜப்பானின்  சாரி நாகாசாவா, கல்லூரி மாணவி.

இலங்கையைச் சேர்ந்த ஜயதி டி சில்வா  என்ற   இளம்பெண் வெல்லவும் வாய்ப்பு இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.. 26 வயது ஆகும் இவர் கொழும்புவைச் சேர்ந்தவர்.

அதே நேரம் போட்டி நடத்தும் அமைப்பினர்., “மற்ற விளையாட்டுக்கள் போல அழகிப்போட்டியில் யார் பட்டம் வெல்வார்கள் என்று முன் தீர்மானம் செய்ய முடியாது. இது வெறும் அழகுக்காகன போட்டி மட்டுமல்ல. இறுதிப்போட்டியின் போது கேட்கப்படும் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்கிறார்கள் என்பதும் பட்டம் வெல்ல முக்கியம்” என்கிறார்கள்

ஆனால், “இதெல்லாம் பம்மாத்து.  அழகு என்பதற்கு வரையறை கிடையாது. உலகில் பிறந்த அனைவருமே அழகானவர்கள் தான்.

பிரபஞ்ச அழகிப் போட்டி என்பது வியாபார யுக்தியே. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தாயாராகும் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை இந்தியாவில் விற்க வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் என்று வரிசையாக இந்திய பெண்களை அழகியாக தேர்ந்தெடுத்தனர். தற்போது இந்த அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் பார்வை இலங்கையை நோக்கி இருக்கிறது. ஆகவே இலங்கைப் பெண் ஜயதி வெற்றி பெறக்கூடும்.

அப்படி வெற்றி பெற்றால் ஐரோப்பிய அழகு சாதன உற்பத்தியாளர்களுக்கு இலங்கை பெரும் சந்தையாக மாறும். அதோடு மற்ற ஆசிய நாடுகளிலும் தங்கள் சந்தையை விரிவு படுத்த அவர்களுக்கு உதவும்” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.