உலக அழகி பட்டம் வெல்ல மானுஷி சில்லாருக்கு உதவிய அவரது பதில்…

பெய்ஜிங்:

சீனாவின் சான்யா நகரில் 2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதும் இருந்து 130 அழகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவி மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டெப்னி ஹில், மெக்சிகோவைச் சேர்ந்த ஆண்ட்ரியா மெஜா ஆகியோருக்கு அளி க்கப்பட்டது.

அழகி போட்டியில் உடல் அழகு மட்டுமின்றி பொது அறிவு சோதனையும் நடக்கும். இந்த வகையில் ம £னுஷி ஒரு கேள்விக்கு அளித்த பதில் தான் அவரது வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இறுதி சுற்றில் கேட்கப்பட்ட அந்த கேள்வி மற்றும் பதில் விபரம்…..

எந்தப் பணி அதிக ஊதியத்துக்குத் தகுதியானது? அது ஏன்? என்று மானுஷி சில்லரிடம் நடுவர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘தாய்மையே அதிக மரியாதைக்குத் தகுதியானது. இது நிதி சார்ந்ததல்ல. தாயே அதிக மதிப்புக்குரியவர் என்பதே எனது கருத்து’’ என்றார். இவரது இந்த பதிலை கேட்டு அரங்கில் கரகோஷம் விண்ணை பிளந்தது. இந்த பதிலும் உலக அழகியாக மானுஷி சில்லர் தேர்வு செய்யப்பட முக்கிய காரணமாக அமைந்தது.

மானுஷி சில்லரின் பெற்றோர் மருத்துவர்கள் ஆவர். தில்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், சோனிபட்டில் உள்ள கல்லூரியில் பட்டப் படிப்பையும் மானுஷி முடித்துள்ளார். உலக அழகி பட்டத்தை வென்ற 6ஆவது இந்திய பெண் மானுஷி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, கடந்த 1966ம் ஆண்டில் இந்தியாவின் ரீட்டா ஃபரியா உலக அழகிப் பட்டத்தை வென்றார்.

அதன் பின், கடந்த 1994ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராயும், 1997ம் ஆண்டில் டயானா ஹேடனும், 1999ம் ஆண்டில் யுக்தா முகியும், 2000ம் ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தனர். இவர்களை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது தான் இப்பட்டத்தை வென்றுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: MISS WORLD 2017: THIS IS THE ANSWER THAT HELPED MANUSHI CHHILLAR CLAIM THE CROWN IN CHINA, உலக அழகி பட்டம் வெல்ல மானுஷி சில்லாருக்கு உதவிய அவரது பதில்...
-=-