`H 2 O என்றால்… : அதிரவைத்த வங்கதேச அழகி

ங்கதேசத்தில் நேற்று ‘மிஸ் வங்கதேசம்’ அழகிப் போட்டி நடைபெற்றது.   இதில் வெற்றிபெறுபவர்தான், உலக அழகிப்போட்டியில் வங்கதேசம் சார்பில் கலந்துகொள்வார்.

இதில் பலர் கலந்துகொண்டனர்.  அவர்களில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானவர்களிடம் நடுவர்கள் கேள்விகளைத் தொடுத்தனர்.

அப்போது, போட்டியில் பங்கேற்ற அழகி ஒருவரிடம், `H2O என்றால் என்ன ’ என்ற கேள்வியை நடுவர்கள் கேட்டனர்.

உடனே அந்த அழகி, `H2O என்றால், ரெஸ்டாரன்டா” என்று கேட்க..  நடுவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

H2O என்றால் தண்ணீர் என நடுவர்கள் விளக்கம் அளிக்க, “வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்த பெயரில் ஒரு ரெஸ்டாரெண்ட் இருக்கிறது.. அதனால்தான் கேட்டேன்” என்று அந்த அழகி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், `H2O என்றால் தண்ணீர் என்று இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக்கூட தெரியும். வங்கதேச அழகிக்குத் தெரியவில்லையே’ என சமூகவலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்துவருகின்றனர்.

இவர்  பதிலளிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம்,  கடந்த 2000-ம் வருடம் நடைபெற்ற உலக அழகிப் போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா பதில் அளித்த வீடியோவும்  தற்போது வைரலாகிவருகிறது.

ப்ரியங்காவிடம் `இப்போது உயிரோடு இருக்கிறவர்களில் யார் மிகவும் வெற்றிகரமான பெண் என்று நினைக்கிறீர்கள்’ என நடுவர் கேட்க, அதற்கு ப்ரியங்கா, `அன்னை தெரசா’ என்று பதிலளித்தார்.

அன்னை தெரசா 1997-ம் ஆண்டே மறைந்துவிட்ட நிலையில், 2000-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரியங்கா சோப்ரா இந்தப் பதிலைக் கூறியது அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Miss World Bangladesh 2018 contestant shocks judges with her answer to ‘What does H2O mean’, `H 2 O என்றால்… : அதிரவைத்த வங்கதேச அழகி
-=-