ந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், தமிழகத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி, ஏவுகணை நாயகன் என்று அன்போது அழைக்கப்படுபவருமான,  பாரத ரத்னா அப்துல்கலாமின் 4வது  ஆண்டு நினைவு தினம் இன்று. அவரது நினைவுகளை போற்றுவோம்.

அணுவிஞ்ஞானியான அப்துல்கலாம் நாட்டின் உயர்ந்த குடிமகன் பதவியான குடியரசு தலைவர் பதவியையும் வகித்து நாட்டு மக்களுக்கு  சேவை செய்தவர். கல்விப்பணியில் தன்னை முழுமை யான அர்ப்பணித்துகொண்ட அப்துல் கலாம், கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே தனது மரணத்தையும் தழுவினார்.

கடந்த 2015ம் ஆண்டு  ஜூலை மாதம் 27–ந் தேதி மறைந்த கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம்  அருகே உள்ள பேக்கரும்பு என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு  மணி மண்டபம், அறிவுசார் மையம் கட்டப்பட்டு  பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வியை தனது சொந்த ஊரில் தமிழ்வழியில் படித்த கலாம், கல்லூரிக் கல்வியை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தொடர்ந்தார். 1954ம் ஆண்டு பிஎஸ்சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

ஆங்கிலத்தில் புலமைப்பெற யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் ஆங்கிலத்தையும்,  ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணி யத்திடம்  இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

மாணவர்களே கனவு காணுங்கள்’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்திய வர். சிறுவர்களுக்கு,  எதிர்கால தலைமுறைக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த செல்போனில் நூலகம் அமைக்கும் தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும் என்ற கலாம்,

இளைஞர்களுக்கு, அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்- கடமையைப்ப ற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் என்று வாழ்க்கை சித்தாந்தையும் கூறி உள்ளார்.

‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’ என்று அடிக்கடி மாணவர்களுக்கு அறிவுரை கூறுவார்.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ’பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு, இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’ என்றார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார். அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

1998ம் ஆண்டு மே மாதம் 11ந்ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டது. இது அவரது சாதனை மகுடத்தில் பொருத்தப்பட்ட மற்றொரு வைரமாகும்.

நம் நாட்டுக்கபாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் யார் இந்த கலாம் என ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொரு வரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

இளைஞர்கள் ஒழுக்கமாகவும், நாட்டுப்பற்றும்  இருக்க வேண்டும் என்று கருதிய கலாம், ’இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’ என்றார்.

கலாம் தினசரி திருக்குரான் படித்து வருவதை தனது வாழ்நாள் குறிக்கோளாக கருதி கடைபடித்து வந்தார்.

குரானில் தனக்கு பிடித்த வரிகள் என்று, ‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ எனும் வரிகளாகும். இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல்கலைக்கழகங்கள் அப்துல்கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன. அது மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

ஏராளமான தேசிய விருதுகளையும் கலாம் பெற்றுள்ளார்.  டாக்டர் பைரன்ராய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பாஷின் விருது, 1996-ம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப்பதக்க விருது, அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான ‘மோடி’ விருது, விஞ்ஞான தொழில் நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

இன்றைய தினம் அவரது 4வது நினைவு நாள்-