டோக்கியோ :

லகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் அல்லோல கல்லோல பட்டு கொண்டிருக்க, வடகொரியா எதைபற்றியும் கவலைபடாமல் இன்று ஏவுகனை சோதனை நடத்தியதாக தென் கொரிய ராணுவம் சொல்லியிருக்கு.

சீனாவுக்கும் தென் கொரியாவிற்கும் இடையில இருக்கும் வட கொரியா எங்க ஊர்ல வைரசா ‘நோ சான்ஸ்’ என்று மார்தட்டி கொண்டிருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு என்று சொல்கிறது.

நாங்க கூட தாம்பா காஷ்மீருக்கு ஆகஸ்ட்ல இருந்து யாரையும் உள்ளவிடல அங்கேயும் தான் எட்டி பாத்துடிச்சி இந்த கொரோனானு இங்க இருக்க நெட்டிசன்கள் கலாய்க்க.

இவ்வளவு களேபரத்துலயும் வடகொரியா ரெண்டு ஏவுகனையை குதூகலமா ஏவியிருக்கு, ஏப்ரல் மாசம் அவங்க நாட்டு ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றம் கூடப்போகுதாம் அதுக்கு எல்லோரையும் உற்சாக மூட்டி மன தைரியத்தை ஏற்படுத்த இப்படி பன்னுச்சாம்.

அதுக்காக இப்படியான்னு தென் கொரியாவும், ஜப்பானும் புலம்பறாங்க.

என்னம்மா இப்படி பன்றீங்களேமா.