காணாமல் போனதாக கூறப்படும் துபாய் இளவரசியின் புகைப்படம் வெளியானது!

காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த துபாய் இளவர்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மனித உரிமை அமைப்பின் அதிகாரியுடன் இளவரசி லத்தீபா இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

latifa

துபாய் அரசரான ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்டூமினின் மகள் ஷேக் லத்தீபா கடந்த மார்ச் மாதம் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. தன் குடும்பத்தின் அதிகப்படியான கட்டுப்பாடுகள் தன் மீது திணிப்பதாக கூறி அவர் நாட்டை விட்டு தப்பி செல்வதாக வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். ஆனால் தப்பி சென்ற இளவரசி எங்கு உள்ளார் என்ற கேள்விக்கு விடை தெரியாமலே இருந்து வந்தது. காணாமல் போனதிலிருந்து இளவரசி எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

latifa1

தப்பி சென்ற லத்தீபாவை துபாய் அதிகாரிகள் மீட்டு மீண்டும் துபாய்க்கு அழைத்து சென்றதாக சிலர் பார்த்ததாக தகவல் கசிந்துள்ளது. லத்தீபா நாட்டை விட்டு தப்பிச் செல்ல பிரான்ஸ் நாட்டின் ரகசிய ஏஜெண்ட் ஒருவரும், பின்லாந்து தற்காப்பு கலை பயிற்றுநர் ஒருவரும் உதவியதாக செய்தி வெளியாகின.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஷேக் லத்தீபா தனது குடும்பத்தினருடன் இல்லத்தில் வசித்து வருவதாக கூறுகிறது. இந்த பிரச்சனையில் தலையிட மனித உரிமை அமைப்பு லத்தீபா காணாமல் போனதில் இருந்து எங்கு உள்ளார், எப்படி இருக்கிறார் ? அவரை பற்றிய தகவல்களை துபாய் அரசு வெளியிடாதது ஏன்? அவர் உயிருடன் தான் இருக்கிறாரா ? என்ற கேள்விகளை அடுக்கடுக்காக முன் வைத்தன. மேலும், லத்தீபாவை அனைவரின் கண்முன் நிறுத்த வேண்டுமென மனித உரிமை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

dubai

லத்தீபாவின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் கூறியதை அடுத்து அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் மனித உரிமை அமைப்பின் அதிகாரி மேரி ராபின்சன் லத்தீபாவை அவரது இல்லத்தில் சந்திததும், மதிய உணவை லத்தீபாவுடன் ராபின்சன் எடுத்துக் கொண்டதும், இருவரும் பேசிக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன. இதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

You may have missed