missing flight1q
கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை, இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று 29 பேருடன் காணாமல்  போனது.  காணாமல் போன விமானம், சென்னை-சூலூரைச் சேர்ந்த விமானப்படை மையத்தின்  33 விமானங்களில் ஒன்று.
இந்த விமானத்தில் எரிபொருள் முழுவதும் நிரப்பப்பட்டிருந்ததால், இதனால் 2500 கிலோமீட்டர் தூரம்வரை பயணம் செய்ய முடியும்.
சென்னைக்கும் அந்தமானில் உள்ள போர்ட்பிளேயர்க்கும் இடையிலான தூரம் 1362 கி.மி. ஆகும். இந்த விமானத்தில் தானியங்கி கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வில்லை. எனினும், இதன் பைலட் களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விமானம் தொலைந்துள்ளது கவலையளிக்கின்றது. தொலைந்தவர்களின் உறவினர்கள் ஏதாவது மாயாஜாலம் நடைபெற்று தொலைந்தவர்கள் திரும்பிவர வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
கடைசித் தொடர்பு:
விமானம் கடைசியாய் சென்னைக்கு கிழக்கே 2167 கிலோமீட்டர் தூரத்தில் பறந்தபோது, பைலட், வலது பக்கம் திரும்பக் கோரிக்கை வைத்ததாகவும், எனினும் அதற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இடது பக்கம் திரும்பியதாகவும், பிறகு வெகுவிரைவாக உயரம் குறையத்துவங்கியதாகவும் பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. ”
குற்றச்சாட்டு:
காணாமல் போன விமானத்தில் பல தொழிற்நுட்பக் கோளாறுகள் கடந்த இரண்டு வாரங்களாக இருந்ததாகவும், அதனை அதிகார்கள் அலட்சியப்படுத்தியதால் தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 12 நாட்களில் மூன்று முறை தொழிற்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன என்று கூறப்படுகின்றது.
எனினும் தாம்பரத்தை சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர், 100% தகுதியுடன் இருந்தால் மட்டுமே பறக்க அனுமதிக்கப்படும். எனவே அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார்.
பிரார்த்தனை:

Puri: Sand artist Sudarsan Pattnaik creates a sand sculpture on the missing Indian Air force aircraft with message "Praying for the safety of lost Indian Air Force AN-32 " at Puri beach of Odisha on Friday.  PTI Photo (PTI7_22_2016_000279A)
மணற்சிற்பி சுதர்சன் பட்நாயக் , ஒடிஸா பூரியில் உள்ள கடற்கரை மணலில் ” பிரார்த்தனை”  சிற்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உறவினர்களும், நண்பர்களும், மனிதாபிமானிகளும் தொலைந்தவர்கள் உயிருடன் கிடைக்க பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
1968 மாயமான மற்றொறு விமானம்:
இந்திய விமானப் படையைச் சேர்ந்த AN-12-BL-534 விமானம் சண்டிகரில் இருந்து புறப்பட்ட விமானம்  ஹிமாச்சலில் உள்ள லாஹவுலில்  தரை இறங்குவதற்கு சற்று முன்னர், மோசமான  வானிலைக் காரணமாக திருப்பி அனுப்பப் பட்டது. 98  விமானப்படை வீரருடன் மனாலிக்கு அருகே ரோட்டங்க் பாஸ் எனும் இடத்தில் மாயமானது. 35 வருடங்களுக்குப் பிறகு , 2003 ட்ரெக்கிங்க் சென்ற ஒரு குழுவினர் ஒரு மனிதச் சடலத்தை கண்டவுடன் கொடுத்த தகவல் மூலம் மறைந்த விமானம் குறித்த தகவல் கிடைத்தது.
தற்போது 48 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு விமானம் தொலைந்துள்ளது.
தேடுதல் வேட்டை மும்முரம்:
13 கப்பல், 2 போசிடான் பி8ஐ மற்றும் இரண்டு ட்ரோனர் விமானங்கள் மற்றும் ஒரு எம்.ஐ.17 ஹெலிகாப்டர் களமிறங்கி தேடி வருகின்றன.
பருவநிலை சாதகமாக இல்லாத போதும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாகச் சென்னைக்கு கிழக்கே 217 கிலோமீட்டரிலிருந்து துவங்கி தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
விமானம் தொலைந்து 48 மணி நேரமாகியும் விமானம்குறித்து தகவல் கிடைக்க வில்லை.
எனவே, விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டு விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு பின்னர் விமானம் வெடித்து சிதறியிருக்கலாமென நம்பப்படுகின்றது.
இந்தச் சம்பவம், இந்திய விமானப்படையின் விமானங்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் குறித்த விவாதத்தைத் துவக்கிவைத்துள்ளது.