‘மிஷன் – 13’ வெற்றியடையும் – பஞ்சாப் முதல்வர் நம்பிக்கை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்திலுள்ள 13 மக்களவைத் தொகுதிகளையும் வென்று தருவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்ற நம்பிககை இருப்பதாக தெரிவித்துள்ளார் அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்.

பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 19ம் தேதிதான் தேர்தல் நடைபெறுகிறது.

அமரீந்தர் சிங் கூறியதாவது, “எங்களின் இலக்கில் நாங்கள் தெளிவாகவும் வலுவாகவும் இருக்கிறோம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் ஆட்சியின் சாதனைகள்தான் இந்த தேர்தலில் பேசும்.

கடந்த 2017 சட்டசபை தேர்தலில் வாக்களித்ததைப் போலவே, மக்கள் இந்தமுறையும் வாக்களிப்பார்கள்” என்றார்.

சிரோன்மணி அகாலிதள் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், பஞ்சாபில் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் இந்த தருணத்தில், காங்கிரசுக்கான வாய்ப்பு நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி