“மிஷன் சக்தி”: பிரதமர் மோடி மீது மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்

டில்லி:

“மிஷன் சக்தி” திட்டம் குறித்து இன்று மக்களிடையே  பிரதமர் மோடி உரையாற்றியது, தேர்தல் விதி மீறல் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து உள்ளது.

மோடியின் உரை தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அளித்துள்ள புகார் மனு வில்,   மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி அளித்துள்ள புகார் மனுவில்,  “மிஷன் சக்தி திட்டம் வெற்றியடைந்தது குறித்து, சம்பந்தப்பட்ட துறை விஞ்ஞானிகள் தான் அறிவிக்க வேண் டும். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்”  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஞ்ஞானிகளின்  சாதனைகளை வைத்து  பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்று  எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்று சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்நிலையில் மிஷன் சக்தி திட்டத்தின் வெற்றி தொடர்பாக புதனன்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு தேர்தல் விதிமீறலா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், பாஜகவோ,  நாட்டின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத் தில்  எடுக்கப்பட்ட தேச பாதுகாப்பு தொடர்பான முடிவுகளோ மற்றும் பேரிடர் நிர்வாகம் தொடர்பான விஷயங்களோ தேர்தல் நடத்தை விதிமுறை வரம்புக்குள் வராது; எனவே அதற்கு முன்அனுமதி பெறத் தேவையில்லை என்று தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.