புதுடெல்லி: செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பம் கடந்த 2012ம் ஆண்டே உருப்பெற்ற ஒன்றுதான் என தகவல்கள் கூறுகின்றன.

வானில் பயன்படாமல், குறைந்த உயரத்தில் உலவுகின்ற செயற்கைக்கோள்களை, ஏவுகணை வீசி அழிக்கும் தொழில்நுட்பத்தை, உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே பெற்றுள்ளன.

தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளதை பிரமதர் மோடி அவசர அறிவிப்பாக வெளியிட்டார். இதை தேர்தல் ஸ்டன்ட் என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்த தொழில்நுட்பம் கடந்த 2012ம் ஆண்டே உருப்பெற்ற ஒன்றுதான் என தெரியவந்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி -5 ஏவுகணை’ சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டபோதே, இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பம் உருப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி