கணுக்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

--

துபாய்: கணுக்கால் காயம் காரணமாக, ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், பந்துவீசுகையில் கணுக்காலில் காயமடைந்தார் மிட்செல் மார்ஷ். அதன்விளைவாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலிருந்தும் மார்ஷ் வெளியேறுகிறார்.

இதை, ஐதராபாத் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவருக்கு பதிலாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது, 5வது ஓவரை வீசியபோது கணுக்காலி காயமடைந்தார் மிட்செல் மார்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஓவரில் அவரால் 4 பந்துகளை மட்டுமே வீச முடிந்தது.