மெல்போர்ன்:

ஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் (காப்பீடு)  நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக ஆடி வந்தார். கடநத ஆண்டு கொல்கத்தா அணி அவரை  ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், அவர் தென்ஆப்பிரிகா தொடரில் விளையாடியபோது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக  ஐ.பி.எல் தொடரில் இருந்தும் விலகி சிகிச்சை எடுத்து வந்தார்.

முன்னதாக மிட்செல் ஸ்டார்க், ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் சுமார் 10 கோடியே 60 லட்சம் ரூபாய்  மதிப்பில் இன்சூரன்சு செய்து அதற்கான பிரிமியமும் செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் ஆடமுடியாத நிலையில், தனக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

இதையடுத்து, தனக்கு சேர வேண்டிய இன்சூரன்ஸ் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இன்சூரன்ஸ் நிறுவனம் மீது ஆஸ்திரேலியா விக்டோரியன் கவுண்டி  நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.