மகளிர் கிரிக்கெட் அணி: ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக மித்தாலி அறிவிப்பு

மும்பை:

நியூசிலாந்து செல்லும் மகளிர் கிரிக்கெட் அணியின்  ஒருநாள் போட்டிக்கு அணித்தலைவராக முன்னாள் கேப்டன் மித்தாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்கள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் கேப்டன் மித்தாலி ராஜ். இவருக்கும், அவருக்கு அடுத்த படியாக விளையாடி வரும் ஹர்மான்பிரீத் கவுர்  இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மித்தாலி ராஜா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, பயிற்சியாளர் ரமேஷ் பவார் உள்பட அணி நிர்வாகம் தனக்கு எதிராக செயல்படுவதாக மித்தாலி ராஜ் குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து  பி.சி.சி.ஐ.க்கு கடிதம்  எழுதினால். அதில், பயிற்சியாளராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரமேஷ் பவார் அணியிலிருந்து தன்னை நீக்கியதாக மித்தாலி ராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து, பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடமிருந்து விளக்கம் கேட்டது.  இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழகத்தை சேர்ந்த டபுள்யு.வி.ராமன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,  நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக மித்தாலி ராஜ், ஹர்மான்பிரீத் கவுர் ஆகியோர் இருப்பார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கு மித்தாலி ராஜ் கேப்டன் என்றும்,  டி20 போட்டிகளுக்கு  ஹர்மான்பிரீத் கவுர் கேப்டன்களாக நீடிப்பார்கள் என்று அறிவித்து உள்ளது.

ஜனவரி மாதம் நியூசிலாந்து செல்லும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த போட்டிகளில் இருந்து  வேதா கிருஷ்ணமூர்த்தி  நீக்கப்பட்டு,  அவருக்கு பதிலாக புதுமுக வீராங்கனை பிரியா பூனியா சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 24ம் தேதி நேப்பியரில் நடைபெற உள்ளது.ஒருநாள் போட்டிக்கான அணி: மித்தாலி ராஜ் (கேப்டன்), பூனம் ராவுத், ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ஹர்மான்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மோனா மேஷ்ராம், ஏக்தா பிஸ்ட், மான்சி ஜோஷி, தயாளன் ஹேமலதா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெயிக்வாட், ஜுலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே.
 
டி20 அணி: ஹர்மான்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மித்தாலி ராஜ், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், அனுஜா பட்டீல், தயாளன் ஹேமலதா, மான்சி ஜோஷி, ஷிகா பாண்டே, டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூனம் யாதவ், ஏக்தா பிஸ்ட், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, பிரியா பூனியா.

கார்ட்டூன் கேலரி