”பயிற்சியாளரால் நான் அவமானப்படுத்தப்பட்டேன் ”- மனம் திறந்த மிதாலி ராஜ்

டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தன்னை சேர்க்கப்படாதது குறித்து மிதாலி ராஜ் பிசிசிஐயிடம் புகார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை அவமானப்படுத்தியதாகவும் மிதாலி ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

mithali

நேற்று முன் தினம் நடந்து முடிந்த டி20 மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. இந்த தொடரில் அரையிறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரையிறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி 8விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. டி20 தொடரில் காலிறுதி சுற்று வரை பங்கேற்ற மிதாலி ராஜ் பாகிஸ்தானுக்கு எதிராக 56 ரன்களையும், அயர்லாந்துக்கு எதிராக 51 ரன்களையும் எடுத்திருந்த போதும் அரையிறுதி சுற்றில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் மிதாலி ராஜ் பிசிசிஐக்கு புகாா் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” 20 வருடமாக நான் பங்காற்றிய விஷயங்கள் அதிகாரத்தில் உள்ள சிலருக்கு மட்டும் ஒன்றும் இல்லாததாக நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். டி20 கேப்டன் ஹா்மன் பிரீத் கவுா் மீது எனக்கு எவ்வித தவறான கருத்தும் இல்லை. என்னை அணியில் இருந்து நீக்க கோாிய பயிற்சியாளரின் முடிவுக்கு அவா் ஆதரவளித்தது தான் ஆச்சரியமாகவும், காயப்படுத்தும் விதமாகவும் இருந்தது.

இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தர விரும்பினேன். ஆனால் அப்படி ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டதை எண்ணி வருந்துகிறேன். நிா்வாகக் குழுவில் உள்ள முன்னாள் இந்திய கேப்டன் டயானா எடுல்ஜியை நான் மிகவும் மதித்தேன். ஆனால், அவருடைய அதிகாரத்தை எனக்கு எதிராகப் பயன்படுத்துவாா் என்று நான் நினைக்கவில்லை. உலகக் கோப்பையில் எனக்கு நேர்ந்த அனைத்தையும் அவரிடம் விளக்கியுள்ளேன். நடந்தவை அனைத்தும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

பயிற்சியாளா் ரமேஷ் பவாா், என்னை மிகவும் அலட்சியப்படுத்தினாா். ரமேஷ் பவார் அருகில் நான் அமா்ந்திருந்தால் அங்கிருந்து கிளம்பி விடுவார். மற்றவா்கள் பயிற்சியில் ஈடுபடும்போது அருகிலிருந்து கவனிப்பவா், நான் பயிற்சியில் ஈடுபட்டால் அங்கிருந்து வெளியேறிவிடுவாா். இதெல்லால் என்னை மிகவும் கஷ்டப்படுத்தின. ரமேஷ் பவார் என்னை அவமானப்படுத்துவது எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் நான் கோபப்படாமல் இருந்தேன் ” என்று குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published.