பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை காலமானார். அவருக்கு வயது 95.

மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை பசந்தகுமார் சக்கரவர்த்தி சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மும்பையில் மரணமடைந்துள்ளார். இத்தகவலை அவரது பேரன் நமாஷி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் படப்பிடிப்புக்காகச் பெங்களூர் சென்ற நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது தனது தந்தையின் மரண செய்தி கேட்ட மிதுன் சக்கரவர்த்தி, இறுதி சடங்கில் கலந்து கொள்ள விரைவில் மும்பை திரும்புவார் என தெரிகிறது.