வெளியானது நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்த வீடியோ….!

கொரோனா லாக்டவுனில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.

அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்ய இருக்கிறார். லாக்டவுன் காரணமாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் எளிமையாக நடந்தது.

அஸ்வின் பிலிப்பும் மியாவும் மோதிரம் மாற்றும் வீடியோவை மியாவின் சகோதரி தனது யூடியூப் சேனலில் இப்போது வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இவர்கள் திருமணம் செப்டம்பரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தேதி முடிவாகவில்லை.