கவுகாத்தி:

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மிஜோரம் மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் திரண்டனர்.

வெளிநாடுகளில் சிறுபான்மையினத்தவராக வாழ்ந்து, மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுக்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கடந்த 8-ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், மிஜோரமில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரது உருவப் பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் தலைவர்கள் பேசும்போது, இளைஞர்களை சுவற்றில் பிடித்து முட்டினால், ஆயுதம் ஏந்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று எச்சரித்தனர்.

இந்நிலையில், பிரதான மாணவர் அமைப்பான மிஜோ ஜிர்லாய் பாவல் உட்பட சில மாணவர் இயக்கங்கள் குடியரசு தின கொண்டாட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.