மிசோராம்: 29 கிலோ தங்கம் கடத்தியவர் சிக்கினார்

அய்ஸ்வால்:

மிசோரமில் 29 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்தவர் பிடிபட்டார்.

மியான்மர் நாட்டின் எல்லையில் உள்ள சம்பை பகுதியை சேர்ந்தவர் ஹால்சிடிங்கா (வயத 55). இவர் 29 கிலோ தங்க கட்டிகளை கடத்தி வந்த போது மாலுங்து என்ற இடத்தில் சுங்கத்துறையினரிடம் சிக்கினார்.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஹால்சிடிங்காவை கைது செய்தனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 9 கோடியாகும்.