சைக்கிளில் மோதிய கோழிக்கு தன் பணத்தில் சிகிச்சை அளித்த சிறுவன்

மிசோரம்

னது சைக்கிளில் அடிபட்ட கோழிக்கு தனது சொந்த பணத்தில்ல் ஒரு சிறுவன் சிகிச்சை அளித்துள்ளான்.

பொதுவாக மனிதர்கள் வளர வளர அவர்களுக்குள் இருக்கும் இரக்க குணம் குறைவதாக பல தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.   அதனால் தான் நமது இந்தியாவில் குழந்தையும் தெய்வமும் ஒன்று என கூறுகிறார்கள்.  தெய்வம் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இரக்கம் காட்டுவதைப் போல் குழந்தைகளும் நடப்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.

மிசோரம் மாநில சிறுவன் ஒருவன் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது அடுத்த வீட்டின் கோழி ஒன்று குறுக்கே வந்ததை கவனிக்கவில்லை.  கோழிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டது.   இது அந்த சிறுவன் மனதை மிகவும் பாதித்துள்ளது.   உடனடியாக அந்த சிறுவன் அந்த கோழியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளான்.

அது மட்டுமின்றி தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் அளித்து அந்த கோழிக்கு சிகிச்சை அளித்துள்ளான்.  இந்த செய்தி சமூக வலை தளத்தில் பதியப்பட்டது.  இதை சுமார் 50000க்கு மேற்பட்டோர் பகிர்ந்து இச்செய்தி வைரலாகி உள்ளது.  அந்த சிறுவனின் உணர்ச்சியான முகம் பலரின் உள்ளத்தை உருக வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.