மிசோரம் சட்டமன்ற தேர்தல்: 12 புதுமுக வேட்பாளர் வேட்பாளர் பட்டியல் அறிவித்தது காங்கிரஸ்

கவுகாத்தி:

ந்த ஆண்டுடன் காலியாக உள்ள மிசோரம் உள்பட 4 மாநில சட்டமன்ற தேர்தல், அத்துடன் தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறித்துள்ளது.

இந்த நிலையில் மிசோரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மிசோரம் சட்டமன்றத்துக்கு நவம்பர்  28-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, டிசம்பர் 11ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு ஒரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.

மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளது.

இந்த நிலையில்,  மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், 12 பேர் புதுமுக வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சுமார் 40 சதவிகித வேட்பாளர்கள் இளைஞர்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

மிசோரமில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் ரோமலியா, துணை சபாநாயகர் லல்ரின்மாலியா  உள்பட 8 பேருக்கு காங்கிரஸ் மேலிடம் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.