தோளில் கல் சுமந்த அமைச்சர்..  நெஞ்சுருகிய பக்கத்து வீட்டுக்காரர்…

தோளில் கல் சுமந்த அமைச்சர்..  நெஞ்சுருகிய பக்கத்து வீட்டுக்காரர்…
மிசோரம் மாநிலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர், ராபர்ட். அங்குள்ள ஐஸ்வால் நகரில் உள்ள சிட்வெங் பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டுக்காரரான லாங் சில்லோவா என்பவர்  இடிந்து போன தனது வீட்டைப் புதுப்பித்துக் கட்டி வருகிறார்.
ஊரடங்கால் தொழிலாளர் பற்றாக்குறை.
மாடிக்கு , பெரிய பாறாங்கற்களைக் கொண்டு சென்றால் கட்டிட பணிகள் ஓரளவு முடியும்..
ஆனால் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை.
தகவல் கேள்விப்பட்ட அமைச்சர் ராபர்ட், 50 மீட்டர் தொலைவில் கொட்டப்பட்டிருந்த கற்களை தன் தோளில் சுமந்து, கட்டுமான வேலை நடக்கும் மாடிக்குக் கொண்டு போய் சேர்த்துள்ளார்.
ஒரு நாள் முழுவதும், கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார், அமைச்சர் ராபர்ட்.
ராபர்ட், மிகச்சிறந்த கால்பந்து வீரர் ஆவார்.எனவே கற்களை அவர், அனாயாசமாகத் தோளில் தூக்கி வைத்துச் சுமந்து சென்றதை, யாரும் ஆச்சரியமாகப் பார்க்கவில்லை.
‘போட்டோ’வுக்கு போஸ் கொடுத்து விட்டு, பிறகு ‘தொழிலாளி’’ வேடத்தைக் கலைத்து விடாமல்,சிரத்தை எடுத்து அமைச்சர் கல் சுமந்தது, வீடு கட்டும் பக்கத்து வீட்டுக்காரரை நெகிழ வைத்துள்ளது.
அந்த மாநிலத்தில் மாநிலக் கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.