மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலி..!

ஐசால்: மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந் நிலையில், மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஒருவா் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

ஐசால் பகுதியை சோ்ந்த 62 வயது நபருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட, அவா் ஷோரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார். 10 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவா் உயிரிழந்து உள்ளார்.

அவருக்கு ஏற்கெனவே இதய நோய் பிரச்னை இருந்ததாக ஷோரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறி உள்ளனர். மிசோரம்  மாநிலத்தில் மார்ச் 24 ம் தேதி முதன்முறையாக 52 வயதுக்கு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

45 நாள் சிகிச்சைக்கு பின்னர் அவா் குணமடைந்தார். பின்னர்  ஜூன் 1ம் தேதி மேலும் 12 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். தற்போது மாநிலத்தின் மொத்த பாதிப்பு 2,607 ஆக உள்ளது.