மிசோரம் மாநில காங்.முதல்வர் லால் தனாவாலா 2 தொகுதிகளிலும் தோல்வி

 ஐஸ்வால்:

மிசோரம் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  லால் தனாவாலா சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில்,  2 தொகுதிகளிலும் தோல்வியை தழுவி உள்ளார். இவர்  5 முறை முதல்வராக  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டமன்றத்துக்கு நவம்பர்  28-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மிசோரம் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்து வந்த எம்.என்.எஃப். கட்சி அபார வெற்றிகளை பெற்றுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், தற்போதைய  முதல்வருமான லால் தனாவாலா  சம்பாய் மற்றும் செர்சிப் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

இந்த 2 தொகுதிகளிலும் அவர் தோல்வியுள்ளார். அவரை எதிர்த்து சம்பாய் தொகுதியில் போட்டியிட்ட  மிசோரம் தேசிய முன்னணியும், செர்சிப் தொகுதியில் போட்டியிட்ட சோரம் மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று வெற்றி பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில கட்சியான எம்என்ப் 26 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களை யும், பாஜக 1 இடத்தையும் மற்ற கட்சிகள் 8 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

அதைத்தொடர்ந்து, பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள எம்.என்.எஃப். கட்சி தனித்து ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ்ஆட்சி மிசோரத்தில் மட்டும்மே நடைபெற்று வந்த நிலையில், அங்கும் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து உள்ளது.