காவல்துறைக்கு உபகரணம் வாங்கிய வழக்கை உடனடியாக விசாரித்திடுக: மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பது ஏன் ?

அதிமுக அரசு ஊழல்வாதிகளை காப்பாற்றுவது இயற்கை. லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்? என்றும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் காவல்துறையிலேயே ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.