காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு  திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் , சிவகங்கை ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். அவர்களுடன் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியும் இருந்தார். தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.