சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு, திமுக  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மலையாள நாவலை சிறப்பாக மொழிப் பெயர்த்து வெளியிட்ட எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி  விருது அறிவிக்கப்பட்டது. அவரது  ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற மலையாள நூலை மொழி பெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில்  நடைபெறும் விழாவில் இந்த விருதுடன், ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.

இந்த நிலையில் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில், சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருதை பெற்றுள்ள கே.வி.ஜெயஶ்ரீ அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழக சங்க இலக்கியக் காட்சிகளை மையமாக வைத்து மலையாளத்தில் எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய நாவலை கேவி ஜெயஶ்ரீ அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். ‘ நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற அந்த நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றுள்ளது. கேவி ஜெயஶ்ரீ அவர்களின் மொழிபெயர்ப்புப் பணி தொடரட்டும்! தமிழ்ப்படைப்புலகம் செழிக்கட்டும்!

இவ்வாறு  அதில் பதிவிடப்பட்டு உள்ளது.