சென்னை  அண்ணாஅறிவாலயத்தில் முதன்முறையாக தேசியகொடியேற்றி மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திமுக தலைமையகமான சென்னை  அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின்  முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாடு முழுவதும் இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில்  தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.