குமாரசாமி பதவி ஏற்பு விழா : மு க ஸ்டாலின் பங்கேற்கவில்லை

சென்னை

ர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளி வந்துள்ளன.

கர்நாடக மாநில முதல்வராக நாளை மஜத கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் மகனுமான குமாரசாமி பங்கேற்க உள்ளார்.   இந்த விழாவில் திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக முதலில் செய்திகள் வெளியாகின.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.   அதை ஒட்டி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் ஒரு பள்ளி மாணவி உட்பட சுமார் 10 பேர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் இதை ஒட்டி நாளை தூத்துக்குடிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.   அதனால் அவர் குமாரசாமியின் முதல்வர் பதவி  ஏற்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.