டில்லியில் சோனியா, ராகுலுடன்     ஸ்டாலின் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சி தலைமையில் நாளை (திங்கள் கிழமை) மாலை நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றிருக்கும் தி.மு.க. தலைவா் ஸ்டாலின்  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இன்று   சந்தித்து பேசினார்.

இன்று டில்லி சென்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியை சந்தித்தார். வரும் 16ம் தேதி நடைபெற இருக்கும் தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா அழைப்பிதழை சோனியாகாந்தியிடம் ஸ்டாலின் அளித்தார். மேலும் இன்று சோனியாகாந்தியின் பிறந்தநாள் என்பதால் அவரை வாழ்த்தினார்.


பிறகு இந்த சந்திப்பு சுமார் முப்பது நிமிடம் நீடித்தது.

“இது வெறும் சம்பிராதயமான சந்திப்பு அல்ல. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், மாநிலத்தில் தி.மு.க. தலைமையிலும் வலுவான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றிருக்கலாம்” என்று அரசியல் மட்டத்தில் பேசப்படுகிறது.

இந்த சந்திப்பில் மு.க. ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்றிருந்தனர்