சோ உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்.!

ஸ்டாலின்
ஸ்டாலின்

“சோ ராமசாமி” அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார் இதனால் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரின் வீட்டில் பல அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சற்று முன் திமுகவின் துணை தலைவர் மற்றும் எதிர் கட்சித் தலைவருமான ஸ்டாலின் சோ அவர்களுக்கு நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் சோ அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். தலைவர் கருணாநிதி சார்பாகவும் சோவின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.