சென்னை:
ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ன மருந்து கொடுக்கப்பட்டது? என்று இன்னமும் தெரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து ஜனவரி 27-ஆம் தேதி பீனிக்ஸ் பறவை வடிவிலான ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

இந்நிலையில் ஜெயல‌லிதா மரணத்தில் உள்ள மர்மங்களை மக்களுக்கு தெளிவுப்படுத்திவிட்டு நினைவிடத்தை திறக்கட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் ராயபுரம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என ஜெயக்குமார் கூறியதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ராயபுரம் தொகுதியில் நான் அல்ல ஒரு சாதரண திமுக தொண்டனை நிறுத்தினால் கூட வெற்றி பெறுவோம் என கூறினார்.