சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

ரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில்  சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநீதிமன்றத்தில் முதல் வழக்காக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் 2 வாரத்திற்குள் ஆஜராக வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள  எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த 17ந்தேதி  தமிழக அரசு  அரசாணை பிறப்பித்தது.

அதையடுத்து,  சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.  சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக மாவட்ட நீதிபதி ஜெ. சாந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 260 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அனைத்தும் இந்த சென்னையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சாந்தி

இந்த நிலையில்  சிறப்பு  நீதிமன்றத்தில் முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதை எதிர்த்தும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தொடுக்கப்பட்ட 3 அவதூறு வழக்குகளையும்  ரத்து செய்யக்கோரியும்  திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் விசாரணையை தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தி மு.க.ஸ்டாலின் 2 வாரத்திற்குள் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதி மன்றம் அறிவிறுத்தி உள்ளது.