ந்த ஆன்மிக அரசியலாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்று ரஜினியின் கருத்து குறித்து  முதன் முறையாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தனிக்கட்சி துவங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும, தான் ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், சிறிது நேரத்துக்கு முன், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது சென்னை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த்.

புத்தாண்டு வாழ்த்து கூறவும், உடல் நலனை விசாரிக்கவும், தான் கட்சி துவங்கியதைச் சொல்லி ஆசீர்வாதம் பெறவும் கருணாநிதியை சந்திப்பதாக ரஜினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இல்லத்துக்கு வந்த ரஜினியை திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். சந்திப்புக்குப் பிறகு ரஜினியை வழியனுப்பிய மு.க.ஸ்டாலினிடம், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு மு.க.ஸ்டாலின், “கருணாநிதியை சந்திக்க வந்த காரணத்தை ரஜினியே கூறினார். அதே போல அரசியல் பண்பாடு நாகரீப்படி கருணாநிதி அவரை வாழ்த்தியிருக்கலாம்” என்று பதில் அளித்தார்.

ரஜினி பேசிவரும் ஆன்மிக அரசியல் பற்றி கேட்டதற்கு, “ரஜினி, தான் ஆன்மிக அரசியல்தான் நடத்தப்போவதாக சொல்லியிருக்கிறார். சிலர் ரஜினியை ஆன்மிக அரசியல் துவக்கவைத்து, திராவிட இயக்கங்களை ஆழித்துவிட நினைப்பதாக ஒரு சித்தரத்தை உருவாக்கி வருகிறார்கள்.

எந்தவொரு அரசியலாலும் திராவிட இயக்கத்தை அழித்துவிட முடியாது.  .. இந்த மண் திராவிட இயக்க மண். பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோரின் உழைப்பால் பன்பட்ட  திராவிட மண் இது.  அப்படிப்பட்ட மண்ணில் திராவிட இயக்க்த்தை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க முயற்சித்தவர்கள் தோற்றிருக்கிறார்கள்  என்பது வரலாறு” என்று மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்..