மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தோழமை கட்சிகள் கூட்டம்

சென்னை

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காணொளி மூலம் திமுக தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.   இதுவரை 2,13,723 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3494 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 1,56.526 பேர் குணம் அடைந்துள்ளன்ர்.  தற்போது 53,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்கள் முழுவதுமாக வெளியிடப்படுவதில்லை என திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழக அர்சை குற்றம் சாட்டி வருகின்றன.   ஆனால் தமிழக அரசு அதை மறுத்து வருகிறது.

இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மற்ரும் தோழமைக் கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது.  இன்று காலை சுமர் 10.30 மணிக்கு காணொளி மூலம் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து

 இந்தகூட்டத்தில் அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள், நிர்வாகத் தோல்விகள் போன்றவை குரித்து விவாதிக்க உள்ளதாக திமுக தலைமை கூறி உள்ளது.