ஆளுநரிடம் இன்று புகார் அளிக்கும் மு க ஸ்டாலின்

--

சென்னை

திமுக செயல்தலைவர் மு க ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநரிடம் சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனை தொடர்பான புகாரை அளிக்க உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ஆகிய தினங்களில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக செயல் தலவர் மு க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.    அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆளுநரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.   இன்று மீண்டும் மு க ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க உள்ளார்.

சுமார் 5 நாட்களாக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் சம்மந்தபட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.   அப்போது அங்கிருந்து ரூ 170 கோடி ரொக்கப்பணம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியதாக கூறப்பட்டது.   இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தப்பட்டிருப்பதாக ஸ்டாலின் புகார் கூறி வருகிறார்.

இன்று காலை 11 மணிக்கு ஸ்டாலின் இது குறித்து ஆளுநரை சந்தித்து பேச உள்ளார்.   அவருடன் திமுகவை சேர்ந்த துரைமுருகன், ஆ ராசா, எ வ வேலு உள்ளிட்டோரும் செல்கின்றனர்.   அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஸ்டாலின் புகார் மனு ஒன்றை அளிக்கிறார்.   அந்த புகாரில் சமீபத்தில் நடந்த வருமானவரி சோதனைய்ல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது உறவினர்கள் உள்ளிட்டோருக்கு சம்மந்தம் உள்ளதாகவும் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிகாஇ விடப்பட்டுள்ளது.